search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ரூ.7 கோடிக்கு மதுவிற்பனை

    புத்தாண்டு பண்டிகை தினத்தன்று ஒரு நாள் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மதுவிற்பனை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது இந்த ஆண்டு நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் ரூ.7 கோடியே 32 ஆயிரத்து 870-க்கு மதுவிற்பனை நடந்துள்ளது.
    திருப்பூர்:

    ஆங்கில புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டை பொதுமக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், இளைஞர்கள் பலர் கேக்குகள் வெட்டியும் கொண்டாடினார்கள்.

    இதற்கிடையே புத்தாண்டு பண்டிகை என்பதால் மதுப்பிரியர்கள் நேற்று முன்தினம் காலை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதில் இருந்தே தங்களுக்கு பிடித்த மதுவகைகளை மொத்தமாக வாங்கி சென்றனர். இதன் காரணமாக திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடை திறக்கப்பட்டதில் இருந்தே இரவு மூடும் வரை விற்பனை களை கட்டியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை அதிகமாக இருந்தது.

    தங்களுக்கு பிடித்த மதுவகைகளை பலரும் போட்டி போட்டு வாங்கி சென்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 236 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் திருப்பூர் பகுதிகளில் 101 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுவிற்பனை மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக இருக்கும்.

    ஆனால் தற்போது புத்தாண்டு பண்டிகை தினத்தன்று ஒரு நாள் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மதுவிற்பனை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது இந்த ஆண்டு நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் ரூ.7 கோடியே 32 ஆயிரத்து 870-க்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

    கடந்த ஆண்டு 2019 புத்தாண்டு தினத்தில் 236 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.5 கோடியே 34 லட்சத்து 57 ஆயிரத்து 90-க்கு மதுவிற்பனை நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.1 கோடியே 65 லட்சத்து 75 ஆயிரத்து 780 அதிகமாகும்.
    Next Story
    ×