search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    தேனி மாவட்ட ஊராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றுகிறது

    திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 23 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன. இதில் 2 வார்டுகளுக்கு மட்டும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 22-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜாவும், 23-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் நாகராணியும் வெற்றி பெற்றுள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 10 மாவட்ட ஊராட்சிகள் உள்ள‌ன. இதில் 7 இடங்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. 2 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் பா.ஜனதாவும் வெற்றிபெற்றுள்ளன.

    வார்டு வாரியாக வெற்றிபெற்றவர்கள் விவரம் வருமாறு:‍-

    1-வது வார்டு பிரீதா (அ.தி.மு.க.), 2-வது வார்டு சந்திரசேகரன் (அ.தி.மு.க), 3-வது வார்டு ஈஸ்வரி (அ.தி.மு.க), 4-வது வார்டு ராஜபாண்டியன் (பா.ஜ.க.) , 5-வது வார்டு பாண்டியன் (அ.தி.மு.க) 6-வது வார்டு வளர்மதி (தி.மு.க), 7-வது வார்டு வசந்தா (அ.தி.மு.க), 8-வது வார்டு அல்லிதேவி (அ.தி.மு.க), 9-வது வார்டு தமயந்தி (தி.மு.க), 10-வது வார்டு இளம்வழுதி (அ.தி.மு.க).

    Next Story
    ×