search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

    புத்தாண்டு சிறப்பு பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆண்டு தோறும் புத்தாண்டு தினத்தையொட்டி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கூட்டத்தில் கட்சி பணிகள், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான புத்தாண்டு சிறப்பு பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கி பேசினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் வேலு, ஏ.கே. மூர்த்தி, மாநில நிர்வாகிகள் தீரன், ஏழுமலை, சுப்பராயலு, செல்வகுமார், முன்னாள் எம்.பி. தன்ராஜ், வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×