search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. இன்று நீர்வரத்து 2 ஆயிரத்து 817 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    கடந்த 26-ந் தேதி 3 ஆயிரத்து 268 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 187 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 2 ஆயிரத்து 817 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று 118.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 118.83 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×