search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கொடுமை - தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

    கோவையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கொடுத்ததாக தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யபட்டது.
    கோவை:

    கோவை சூலூர் விமானப்படை மையத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. விமானப்படை பிரிவில் பணியாற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.இவரின் மூத்த மகன் பிளஸ்-1 வகுப்பும், இளைய மகன் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த 1-ந் தேதி இவர்கள் வகுப்பில் இருக்கும் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகநாதன் மாணவர்கள் 2 பேரையும் செல்போன் மறைத்து வைத்து இருப்பதாக கூறி சோதனை செய்ய வேண்டும் என கூறி தனி அறைக்கு அழைத்து சென்றார். தலைமை ஆசிரியருக்கு உதவியாக பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் திவ்யா, தமிழரசி மற்றும் அருணா ஆகியோர் அண்ணன், தம்பி 2 பேரையும் அழைத்து சென்றனர்.பின்னர் ஆசிரியைகள் 3 பேரும் மாணவர்களின் கைகளை பிடித்துக்கொண்டனர். அப்போது தலைமை ஆசிரியர் மாணவர்களின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கினார். பின்னர் மாணவர்களின் ஆசன வாயில் விரலை விட்டு கொடுமைபடுத்தி உள்ளார். மேலும் மாணவர்களின் மர்ம உறுப்பை பிடித்து இழுத்துள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மேகநாதன் மாணவர்களை நிர்வாணமாக்கி தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு விடுவதாக கூறி கொலை மிரட்டில் விடுத்துள்ளார்.

    இது குறித்து மாணவர்கள் தங்களுக்கு நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளர். அவர் பள்ளிக்கு சென்று கேட்ட போது தலைமை ஆசிரியர் பதில் கூற மறுத்து விட்டார்.ஆசிரியர்கள் கொடுமைபடுத்தியதால் வலி தாங்க முடியாமல் இருந்த தனது மகன்களை அவரது தாய் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். மாணவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இது குறித்து மாணவர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பள்ளி மாணவர்களை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவர்கள் தங்களை தலைமை ஆசிரியர் மேகநான், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் பாலியல் கொடுமை படுத்தியதாக சூலூர் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது எனவும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாலமுருகன், சூலூர் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பினர். தொடர்ந்து மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×