search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    69 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

    வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டி வருவதால் கரையோர மக்களுக்கு தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்தது. 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2607 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2090 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5573 மி. கனஅடியாக உள்ளது.

    இதனால் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டும்போது அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வைகை ஆற்றுப்பாதையில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.

    கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலமும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

    பெரியாறு அணை நீர்மட்டம் 128.40 அடியாக உள்ளது. வரத்து 1152 கனஅடி, திறப்பு 1652 கனஅடி, இருப்பு 4352 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 54.80 அடி, வரத்து 207 கனஅடி, திறப்பு 100 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 126.37 அடி, வரத்து 52 கனஅடி, திறப்பு 30 கனஅடி.

    Next Story
    ×