search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்ட காட்சி
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்ட காட்சி

    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,615 சிறப்புப் பேருந்துகள் - தமிழக அரசு

    கார்த்திகை மகாதீப விழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் கார்த்திகை மகா தீபத்திருவிழா முக்கியமானது. இந்த ஆண்டு மகா தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வரும் 10-ம் தேதி ஏற்றப்படுகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

    இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை மகாதீப விழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

    பேருந்து

    வரும் 9-ம்தேதி முதல் 12-ம் தேதி வரை மொத்தம் 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஓசூர், கோவை, திருச்சி, பெங்களூரு, தருமபுரி, கும்பகோணம் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து மட்டும் 500 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×