search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடைகோரி வழக்கு- தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

    டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடங்கினார். இந்த கட்சியின் முக்கிய நிர்வாகியாக ஓசூரை சேர்ந்த புகழேந்தி திகழ்ந்தார். இந்த கட்சியில் இருந்து அண்மையில் வெளியேறிய புகழேந்தி, அ.ம.மு.க.வுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    டி.டி.வி.தினகரன் தொடங்கிய அ.ம.மு.க.வை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கையின்போது, 100 பேர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும். அதில் நானும் ஒருவன்.

    அந்த 100 பேரில் தற்போது 15 பேர் அ.ம.மு.க.வை விட்டு வெளியேறி விட்டோம். முறையாக பொதுக்குழு, செயற்குழுவை கூட்டாமல், தன்னிச்சையாக டி.டி.வி.தினகரன் செயல்படுகிறார். கட்சி நிர்வாகிகளையும் முறைப்படி நியமிக்காமல், விருப்பம் போல் நியமித்துள்ளார்.

    எனவே, இவரது கட்சியை தேர்தல் ஆணையம் பதிவு செய்ய தடை விதிக்கவேண்டும். இந்த கட்சியை பதிவு செய்ய டி.டி.வி.தினகரன் செய்துள்ள விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. டி.டி.வி.தினகரன், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×