search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேசிபி எந்திரம் மூலம் சுற்றுப்புற சுவர் இடிக்கும் பணி நடைபெற்று வரும் காட்சி
    X
    ஜேசிபி எந்திரம் மூலம் சுற்றுப்புற சுவர் இடிக்கும் பணி நடைபெற்று வரும் காட்சி

    மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி வாங்கிய சுற்றுப்புற சுவர் இடிப்பு

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி வாங்கிய சுற்றுப்புற சுவர் இன்று இடித்து அகற்றப்பட்டது.
    காரமடை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலனியில் ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானார்கள்.

    உயிர் பலி வாங்கிய இந்த சுவரை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பலியானவர்கள் உறவினர்களுக்கு ஆறுதல் கூற வந்த அரசியல் கட்சி தலைவர்களிடமும் பொதுமக்கள் இந்த கோரிக்கையை வைத்தனர்.

    சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து

    இதனை தொடர்ந்து அந்த சுவரை இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை 17 பேரை பலி வாங்கிய 20 அடி உயர சுற்றுப்புற சுவரை இடிக்கும் பணி தொடங்கியது. மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுவரை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆர்.டி.ஓ. சுரேஷ் முன்னிலையில் இந்த பணி நடைபெறுகிறது.

    இன்று மாலைக்குள் சுவர் முழுமையாக இடித்து தரைமட்டம் ஆக்கப்படும் என தெரிகிறது.

    தற்போது இடிந்து விழுந்து 17 பேரை பலி வாங்கிய சுற்றுப்புற சுவர் உள்ள அதே பகுதியில் கூத்த மண்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான சுற்றுப்புற சுவர் உள்ளது.

    இந்த சுவரையும் இடிக்க நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக அங்கு ஜே.சி.பி. எந்திரத்தை நிறுத்தினார்கள்.

    இதற்கு ராஜேந்திரன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் நல்ல முறையில் அஸ்திவாரம் போட்டு தான் இந்த சுற்றுப்புற சுவரை கட்டி உள்ளோம். சுவர் பலமாகதான் உள்ளது. அதனை இடிக்க கூடாது என்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நடூர் ஏ.டி. காலனி பகுதியில் ஏராளமான சுற்றுச்சுவர்கள் 20 அடி உயரத்துக்கும் மேல் உள்ளது. இதனை 20 வரை உயரம் வரை விட்டு விட்டு மேல் பகுதிகளை இடிக்க நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன் படி நடூர் ஏ.டி. காலனி பகுதிகளில் 20 அடி உயரத்துக்கு மேல் உள்ள தடுப்பு சுவர்களை ஜே.சி. பி. எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


    Next Story
    ×