search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்

    ஜெயலலிதா நினைவு நாள்- எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். தலைமையில் அஞ்சலி

    3-ம் ஆண்டு நினைவுநாளான டிச.5-ந்தேதி ஜெயலலிதா சமாதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச்செயலாளர், புரட்சித்தலைவி அம்மா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016.

    அம்மாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளான 5.12.2019 (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையில் இருந்து, கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாகப் புறப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

    அதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்தி ரளாகக் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×