search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தம்

    பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து செப்டம்பர் 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. நீர்வரத்து காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் 6-ந் தேதி சென்னை குடிநீர் வாரியத்துக்கும், 11-ந் தேதி புழல் ஏரிக்கும் இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 1-ந் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்தநிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் நெல் சாகுபடிக்காக கிருஷ்ணா நதி நீரை எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்தது. இன்று காலை 90 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

    பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று மாலை நிறுத்தப்பட்டது.

    கடந்த 1-ந் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 350 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 25. 65 அடியாக பதிவானது. 938 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 431 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் 21 கனஅடியும் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
    Next Story
    ×