search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காயத்ரி-ஸ்டீபன்
    X
    போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காயத்ரி-ஸ்டீபன்

    காதலனை போராடி கரம் பிடித்த கல்லூரி மாணவி - போலீஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் பாசப்போராட்டம்

    நாகர்கோவில் அருகே சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஒரு மணி நேர பாசப்போராட்டத்திற்கு பிறகு கல்லூரி மாணவி காதலனை கரம் பிடித்தார்.
    என்.ஜி.ஓ. காலனி:

    நாகர்கோவில் அருகே பறக்கை செட்டித் தெருவைச் சேர்ந்தவர் காசிலிங்கம், (வயது 44). இவரது மகள் பலவேசம் என்ற காயத்ரி (20).

    இவர், நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற காயத்ரி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

    ஆனால் எங்கு தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை. இதனால் காசிலிங்கம், சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காயத்ரியை தேடி வந்தனர். இந்த நிலையில் காயத்ரி, தனது தாயாரிடம் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் போனில் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து காயத்ரி தனது காதலன் நாகர்கோவில் செட்டிக்குளத்தைச் சேர்ந்த ஸ்டீபன் (20) என்பவருடன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்த தகவல் இரு வீட்டார் பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். காயத்ரியை தனது பெற்றோர் தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் காயத்ரி, ஸ்டீபனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொண்ட தாகவும் கூறினார்.

    பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்தார். சுமார் 1 மணி நேரமாக நடந்த பாசப்போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் காயத்ரியின் பெற்றோர் அங்கிருந்து வெளியேறினார்கள். காதல் ஜோடியை போலீசார் வாழ்த்தி அனுப்பினர்.
    Next Story
    ×