search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 16 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 16 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.

    கடந்த ஆண்டை விட உயிரிழப்புகள் குறைவு என்றாலும் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 16 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் இருந்து 10 குழந்தைகளும், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 6 குழந்தைகள் என மொத்தம் 16 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 17 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 157 பேர் என மொத்தம் 174 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-

    குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை காய்ச்சல் எளிதில் தாக்கும். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெற்றோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×