search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ரெயில் நிலையம்
    X
    மதுரை ரெயில் நிலையம்

    மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின

    மதுரை ரெயில் நிலையத்தில் சிக்கிய கள்ள நோட்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்துக்கு இன்று காலை குடிநீர் பாட்டில்கள் ஏற்றி கொண்டு வந்த லாரி வந்தது. அதனை டிரைவர் பூபதி (வயது36) ஓட்டி வந்தார்.

    ரெயில் நிலைய கிழக்கு நுழைவு வாசல் முன்பு லாரி வந்தபோது அந்த வழியாக வந்த ஒருவர் மஞ்சள் துணிப் பையை லாரி மீது வீசி விட்டு தப்பி ஓடினார்.

    இதனை கவனித்த டிரைவர் பூபதி லாரியை நிறுத்தினார். மஞ்சள் பையை எடுத்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். திலகர்திடல் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாரி டிரைவர் பூபதி துணிப்பையை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    அந்த பையை போலீசார் சோதனை செய்தபோது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் 381 தாள்கள் இருந்தது. இவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பதும், பெரும்பாலானவை ஜெராக்ஸ் தாள்கள் என்று தெரியவந்தது.

    இதனை வீசியது யார்? என்பது குறித்து திலகர்திடல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை ரெயில் நிலையத் தில் ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ள நோட்டு கும்பல் குறித்தும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×