search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேடசந்தூர் அருகே 70 வயது மூதாட்டியை கற்பழித்த தொழிலாளி கைது

    வேடசந்தூர் அருகே 70 வயது மூதாட்டியை கற்பழித்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த சுப்பன் மனைவி குப்பம்மாள் (வயது70). இவர் காடுகளுக்கு சென்று மூலிகை செடிகளை சேகரித்து அதனை நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்து வந்தார்.

    ஒட்டநாகம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (48) ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் காடுகளில் மூலிகை செடிகள் இருக்கும் இடங்களை குப்பமாளிடம் தெரிவிப்பார். அந்த இடத்திற்கு சென்று குப்பம்மாள் செடிகளை சேகரித்து விற்று வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு குப்பம்மாள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த சீனிவாசன் பல வந்தமாக கற்பழித்துள்ளார். இதில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட குப்பம்மாள் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். டாக்டர்கள் விசாரித்தபோது அவர் நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து வேடசந்தூர் போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். குப்பம்மாள் உடல்நிலை மோசமடையவே அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×