search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்பி
    X
    செல்பி

    ‘செல்பி’ மோகம் - ரெயில் என்ஜின் மோதி வாலிபர் பலி

    கோவையில் தண்டவாளத்தில் நின்றபடி ரெயில் என்ஜின் அருகே வரும்போது செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.
    கோவை:

    பீகார் மாநிலம் கயா அருகே உள்ள தங்குபாவை சேர்ந்தவர் புல்சான் முஞ்சினி. இவரது மகன் ராஜ்மோகன் குமார் (வயது 25). இவர் கோவை சிங்காநல்லூர் சூர்யா நகரில் தங்கி இருந்து அங்குள்ள மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை இவர் வழக்கம் பேல தனது நண்பரான பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருடன் வேலைக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக சென்றார்.

    அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்லும்போது போத்தனூரில் இருந்து திருப்பூருக்கு ரெயில் என்ஜின் சென்று கொண்டு இருந்தது. இதனை பார்த்த ராஜ்மோகனுக்கு அதன் அருகில் நின்று செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவர் தனது செல்போனை எடுத்துக்கொண்டு தண்டவாளம் நோக்கி சென்றார். இதனை பார்த்த அவரது நண்பர் ராஜேஷ் செல்பி எடுக்க வேண்டாம் என்று ராஜ்மோகன் குமாரை அழைத்தார். ஆனால் எதையும் காதில் வாங்கி கொள்ளாத ராஜ் மோகன் குமார் தண்டவாளத்தில் நின்றபடி ரெயில் என்ஜின் அருகே வரும்போது செல்பி எடுக்க தயாரானார்.

    ரெயில் என்ஜின் அருகே வந்தபோது ‘செல்பி’ எடுத்தார். பின்னர் தண்டவாளத்தை விட்டு ஓட முயன்றார். கண்இமைக்கும் நேரத்தில் ரெயில் என்ஜின் ராஜ்மோகன் குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே நண்பர் கண்முன்னே துடிதுடித்து பலியானார்.

    இந்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜ்மோகன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×