search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினீயர் கைது

    திருக்கோவிலூர் அருகே மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    புதுவை பாரதிநகர் பகுதியை சேர்ந்த 25 வயது பட்டதாரி பெண்ணுக்கும் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் கார்த்திக்( வயது 28)என்பவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    திருமண சீர்வரிசையாக ரூ.50 லட்சம் மதிப்பு உள்ள நகை மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டது.

    திருமணமாகி சில நாட்கள் கார்த்திக் அவரது மனைவியுடன் கீழையூர் பகுதியில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

    அப்போது கார்திக்கின் மனைவிக்கு சரியாக சமையல் செய்ய தெரியவில்லை என கார்த்திக்கின் தந்தை கோவிந்தராஜீம் அவரது தாய் மல்லிகாவும் சேர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    இந்த நிலையில் கார்த்திக்குக்கு சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. இந்த விபரத்தை கார்த்திக் அவரது மனைவியிடம் தெரிவித்தார். அதன் பின்னர் நாம் இருவரும் சென்னைக்கு செல்ல வேண்டும். அங்கு நாம் தங்க வீடு பார்க்க வேண்டும் அதற்காக நீ உனது பெற்றோரின் வீட்டுக்கு சென்று ரூ.2 அரை லட்சம் பணம் வாங்கி வா என்று அவரது மனைவியிடம் கூறினார்.

    உடனே கார்த்திக்கின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி கொடுத்தார். அதன் பின்னர் கார்த்திக் அவரது மனைவியுடன் சென்னையில் வீடு பார்த்து குடியேறினார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திக்கின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரி ஸ்ரீபிரியா ஆகியோர் சென்னைக்கு சென்றனர். அவர்கள் கார்த்திக் தங்கியிருந்த வீட்டை பார்த்து விட்டு வீடு சரியில்லை என்று கூறி கார்த்திக்கை திட்டியுள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அதன் பின்னர் செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்து விட்டு அதில் உள்ளது போல் நடந்து கொள்ளுமாறு அவரது மனைவியை வற்புறுத்தினார்.

    அதற்க்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தான் கூறுவதை போல் நடந்து கொள்ளாவிட்டால் அவரது மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதில் பயந்து போன அவர் கார்த்திக் கூறியதை போல் நடந்து கொண்டார். இந்த சம்பவத்தை கார்த்திக் தனது மனைவிக்கு தெரியாமல் அவரது செல்போனில் கார்த்திக் பதிவு செய்தார்.

    சில நாட்களுக்கு பிறகு கார்த்திக்கின் செல்போனை எடுத்து பார்த்த அவரது மனைவி கணவருடன் சேர்ந்து இருந்த காட்சிகள் அந்த செல்போனில் பதிவாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கணவர் கார்த்திக்கிடம் கேட்ட போது கார்த்திக்கும் அவரது குடும்பத்தினரும் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவரை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அந்த பெண் அவரது பெற்றோரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சென்னைக்கு சென்று கார்த்திக்கின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி நியாயம் கேட்டுள்ளனர். அதற்க்கு அவர்கள் நீங்கள் கொடுத்த வரதட்சணை போதாது கூடுதலாக ரூ.5லட்சம் வரதட்சணை தர வேண்டும் என்று கூறினர். அதற்க்கு அவர்கள் நாங்கள் எங்கள் மகளை எங்களுடன் அழைத்து செல்கிறோம் என்று கூறி அந்த பெண்ணை அவரது பெற்றோர் தங்களுடன் அழைத்து சென்றனர்.

    இது குறித்து அந்த பெண் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் கார்த்திக், அவரது தந்தை கோவிந்த ராஜ்,தாய் மல்லிகா,சகோதரி ஸ்ரீபிரியா ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×