search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் வெங்கடேசன்
    X
    டாக்டர் வெங்கடேசன்

    நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் - டாக்டர் வெங்கடேசனுக்கு காவல் நீட்டிப்பு

    நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    தேனி:

    நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் தேனி மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தையான சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து உதித்சூர்யாவிற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    மதுரை மத்திய சிறையில் உள்ள டாக்டர் வெங்கடேசன் காவல் நீட்டிப்பிற்காக தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வெங்கடேசனின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து வருகிற 21-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் செல்வம் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டாக்டர் வெங்கடேசனை பார்ப்பதற்காக அவரது மகன் உதித்சூர்யா, மனைவி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். டாக்டர் வெங்கடேசன்

    Next Story
    ×