search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    கூடலூர்:

    கேரள எல்லைப் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதிமன்றம் மூவர் குழுவை நியமித்தது. அவர்களுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. மத்திய நீர்வள ஆணையர் செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் துணைக்குழுவினர் கடந்த செப்டம்பர் 4-ந் தேதி பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

    அப்போது நீர் மட்டம் 125.60 அடியாக இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக பொதுப்பணித்துறை முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் நீர் வரத்து, நீர் வெளியேற்றம், மழைப்பதிவு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார், ராஜகோபால் உள்பட பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு காலாண்டுக்கும் கண்காணிப்பு பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளை ஆய்வு செய்து அணைகள் பாதுகாப்பு கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான ஆய்வுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையை பாதுகாப்பு கமிட்டியிடம் ஒப்படைத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    Next Story
    ×