search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசில் ரிப்போர்ட்டர் செயலி
    X
    விசில் ரிப்போர்ட்டர் செயலி

    ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பாக்கும் ‘விசில் ரிப்போர்ட்டர்’

    பயன்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டிகளாக மாற்ற உதவும் வகையில் ‘விசில் ரிப்போர்ட்டர்’ என்ற செயலியை அதிமுக தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியுள்ளது.
    சென்னை:

    திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இனிமேல் இதுபோன்ற சம்பவம் ஏற்படாமல் இருக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி, பயன்படாமல் கிடக்கும் ஆழ்துளைக்கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு, பயன்படாமல் அபாய நிலையில் உள்ள ஆழ்துளைக்கிணறுகளை கண்டறிய விசில் ரிப்போர்ட்டர் என்ற செயலியை உருவாக்கியுள்ளது.

    விசில் ரிப்போர்ட்டர் செயலி

    விசில் ரிப்போர்ட்டர் செயலியை உங்கள் செல்போனில் உள்ள ப்ளேஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களது விவரங்கள் கொடுத்து லாகின் செய்து உங்களுக்கு தெரியவரும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு பற்றிய விவரங்களை இதன்மூலம் தெரியப்படுத்தலாம்.

    அல்லது, பயன்படாத ஆழ்துளை கிணற்றின் அருகில் நின்று கொண்டு செயலியின் வலதுபுறத்தில் கீழே இருக்கும் பச்சை நிற பட்டனை அழுத்தினால், புகைப்படம் மற்றும் அந்த ஆழ்துளை கிணறு இருக்கும் இடம் பற்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு குழுவுக்கு சென்றுவிடும்.

    பிறகு அந்த இடத்தை கண்டறிந்து பயன்படாத ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த செயலி தொடர்பான தகவல்களை பிறருக்கு பகிர்வதன் மூலம் ஆழ்துளை குழாய் கிணறு மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்களும் உதவலாம்.


    Next Story
    ×