search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயை கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்
    X
    தீயை கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்

    கோவில்பட்டியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து - ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் நாசம்

    கோவில்பட்டியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் அருகே கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பிரபல ஜவுளிக்கடை கடந்த ஒரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிவதை கண்ட இரவு நேர காவலர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து மளமளவென பற்றி எரிந்து கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவி எரிந்தது. பின்னர் மின்சார துறையினர் வந்து அப்பகுதியில் உள்ள மின் இணைப்பை துண்டித்தனர். கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு வாகனம் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதைத் தொடர்ந்து விளாத்திகுளம், கழுகுமலை, சாத்தூர், தூத்துக்குடி, பாளையங்கோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 6 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். எனினும் கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது மட்டுமின்றி உள்ளே இருந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வருவாய் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டர்.

    இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×