search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    டெங்கு கொசு உற்பத்தி - எண்ணெய் கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

    டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த எண்ணெய் கம்பெனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    செங்குன்றம்:

    செங்குன்றம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராண்ட்லைன் ஊராட்சி பகுதியில் மாவட்ட கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அதிகாரி எஸ். அமிழ்த மன்னன் மற்றும் அதிகாரிகள் தனியார் எண்ணெய் கம்பெனியை ஆய்வு செய்தனர்.

    அங்கு டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை உற்பத்தி செய்யும் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கம்பெனிக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஊராட்சியில் உள்ள கடைகள், தனியார் கம்பெனி கள், ஓட்டல்கள், ஆகியவற்றிலும் ஆய்வு நடந்தது

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட பேரூராட்சி இணை இயக்குனர் நாகராஜ் மேற்பார்வையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி செயலாளர் கோ. சதீஷ் தலைமை தாங்கினார். இந்த பேரணியை மாவட்ட தாட்கோ அதிகாரி எஸ்.சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    செங்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி செங்குன்றம் ஜி.என்.டி. சாலை திரு.வி.க. சாலை மற்றும் பேரூராட்சி தெருக்களில் ஊர்வலமாக சென்றது. அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த பேரணியில் செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பேரூராட்சி சுகாதார அலுவலர் மதியழகன் சுகாதார மேற்பார்வையாளர் ஜலபதி மற்றும் பேரூராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×