search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மெட்ரோ (கோப்பு படம்)
    X
    சென்னை மெட்ரோ (கோப்பு படம்)

    தீபாவளியை முன்னிட்டு மெட்ரோவில் 50 சதவிகிதம் கட்டணச் சலுகை

    தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவிகிதம் கட்டணச்சலுகை வழக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

    தீபாவளி நாளன்று சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதும். சுற்றுலா தளங்களுக்கு செல்ல பெரும்பாலான மக்கள் மெட்ரொ ரெயில் உள்பட பல்வேறு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துகின்றனர்.

    இந்நிலையில், தீபாவளியன்றும் அதற்கு அடுத்த நாளும் ( செப்டம்பர் 27 மற்றும் 28) சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50 சதவிகிதம் கட்டணச்சலுகை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×