search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த சுபஸ்ரீ
    X
    உயிரிழந்த சுபஸ்ரீ

    பேனர் விழுந்து சுபஸ்ரீ பலி- அதிமுக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

    சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபால் மகன் திருமணம் நடந்தது.

    இதற்காக வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனர், சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது விழுந்தது.

    இதில், அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தபோது, பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் துடிதுடித்து சாலையிலேயே பலியானார்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாரும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் தனித்தனியாக இரு வழக்குகளை பதிவு செய்தனர். ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இருவருக்கும் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×