search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலியான துர்க்கையம்மாள், ரவிக்குமார்.
    X
    மின்சாரம் தாக்கி பலியான துர்க்கையம்மாள், ரவிக்குமார்.

    கோவையில் துக்க வீட்டில் பெண் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

    கோவையில் துக்க வீட்டில் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பன்னிமடை ஊராட்சி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). இவர் கடந்த 15-ந்தேதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

    பழனிசாமியின் இறுதி சடங்கை அவரது மகன் முருகன் மற்றும் பேரன் ரவிக்குமார் (26) ஆகியோர் செய்தனர். இறுதி சடங்கு முடிந்த பின்னரும் துக்கம்விசாரிக்க உறவினர்கள் வந்து சென்றனர்.

    இந்நிலையில் உடுமலை சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த அம்மாசை என்பவரின் மனைவி துர்க்கையம்மாள் (50) என்பவர் துக்கம் விசாரிக்க வந்தார். துக்கம் விசாரித்து விட்டு ஊர் திரும்ப முடிவு செய்தார். ஆனால் இரவு நேரமாகி விட்டதால் துக்கவீட்டிலேயே தங்கினார்.

    இரவில் உறவினர்கள் நடமாட வீட்டின் முன்பு இருந்த இரும்பு கேட் மீது வயர் இழுத்து லைட் போடப்பட்டிருந்தது. உறவினர்கள் ஒருவருக்குக்கு ஒருவர் பேசி விட்டு தூங்கச்சென்றனர்.

    நள்ளிரவு துர்க்கையம்மாள் இயற்கை உபாதைக்காக வெளியே வந்தார். இரும்பு கேட்டை திறந்துபோது அதில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் தூங்கிக்கொண்டிருந்த ரவிக்குமார் எழுந்து வந்து வெளியே பார்த்தார். அப்போது அவரும் அதே இரும்பு கேட்டை தொட்டார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில்அவரும் தூக்கி வீசப்பட்டார்.

    சத்தம்கேட்டு உறவினர்கள் எழுந்து வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கிய துர்க்கையம்மாள் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரியவந்தது. மின் வயர் சில இடங்களில் அறுந்து கிடந்தது. இதனால் இரும்பு கேட் மீது மின்சாரம் பாய்ந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.

    துக்கம் நடந்த வீட்டில் பேரன் மற்றும் உறவுப்பெண் ஆகியோர் இறந்த சம்பவம் தெரியவந்ததும் அந்த பகுதி மக்கள் வீட்டின் முன்பு திரண்டு கதறி அழுதனர்.

    இது குறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×