search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம்
    X
    பணம்

    புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

    புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை அரசின் நிதித்துறை சூப்பிரண்டு ரவீந்திரன் வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு துறையில் குரூப் ஏ, பி, சி. பிரிவுகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனசை அரசு அறிவித்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் போனஸ் அறிவிப்பை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிடவில்லை.

    இதற்கு பதிலாக அரசின் நிதித்துறை சூப்பிரண்டு ரவீந்திரன் தீபாவளி போனஸ் தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

    அந்த உத்தரவில் மத்திய அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதன்படி புதுவை அரசின் குரூப் ‘சி’ பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், குரூப் ‘பி’ பிரிவில் அரசிதழில் பதிவு பெறாத ஊழியர்களுக்கும் தீபாவளி போனசாக ரூ.6 ஆயிரத்து 908 கிடைக்கும்.

    இது தவிர, 3 ஆண்டு பணி முடித்த தினக்கூலி உள்ளிட்ட கடைநிலை பிரிவு ஊழியர்களுக்கு ரூ.ஆயிரத்து 184 போனசாக கிடைக்கும்.

    சுமார் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும்.

    Next Story
    ×