search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூல வைகையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
    X
    மூல வைகையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை- அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

    தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    திண்டுக்கல், தேனி உள்பட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

    அதன்படி நேற்று காலையில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் கனமழையை தொடர்ந்து இரவு வரை சாரலாக பெய்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 126 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 2302 கன அடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 3169 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 2684 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 2090 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 62.30 அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50 அடி. அணைக்கு 494 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடி. வருகிற 168 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுவதால் வராகநதியில் தண்ணீர் அதிகரித்து இரு கரையையும் தொட்டபடி செல்கிறது. இதனால் விவசாயிகள் எச்சரிக்கையுடன் ஆற்றை கடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பெரியாறு 8, தேக்கடி 46.8, கூடலூர் 15.2. சண்முகாநதி அணை 7, உத்தமபாளையம் 12.4, வீரபாண்டி 48.1, வைகை அணை 15, மஞ்சளாறு 34, மருதாநதி 31.2, சோத்துப்பாறை 22.
    Next Story
    ×