search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரேஷ்
    X
    சுரேஷ்

    திருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்

    திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சுரேஷ் பயன்படுத்திய மினிவேனை திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருச்சி நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான சுரேஷ், கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கோர்ட்டில் சரணடைந்தார்.

    இதையடுத்து திருச்சி போலீசார் குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி செங்கம் கோர்ட்டில் மனு அளித்தனர்.

    பின்னர் போலீசார் சுரேசை திருச்சிக்கு அழைத்து சென்றனர். மேலும் முக்கிய குற்றவாளியான முருகன் கடந்த 11-ந் தேதி பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தார்.

    இந்நிலையில் சுரேஷ் செங்கம் கோர்ட்டில் சரணடைவதற்கு முன்பு திருவண்ணாமலையில் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    எனவே சுரேஷ் அங்கு மேலும் நகைகளை பதுக்கி வைத்துள்ளாரா? அல்லது கடைகளில் விற்பனை செய்துள்ளாரா என விசாரணை நடத்துவதற்காக, திருச்சி போலீசார் திருவண்ணாமலைக்கு வந்தனர்.

    அப்போது சுரேஷ் திருவண்ணாமலையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் தங்க நகைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் சந்தேகம் வராமல் இருப்பதற்காக லோடு வேனில் சுற்றித்திரிந்த கொள்ளையன் சுரேஷ், திருவண்ணாமலையில் தங்கியிருந்த இடத்தில் வேனை நிறுத்தி வைத்திருந்தார். அந்த லோடு வேனை போலீசார் பறிமுதல் செய்து திருச்சிக்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×