search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருத்தணி மோட்டார் வாகன அலுவலகத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு ஒட்டுநர் உரிமம் - ஊழியர் உள்பட 3 பேர் கைது

    திருத்தணி மோட்டார் வாகன அலுவலகத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு ஒட்டுநர் உரிமம் வழங்கியது தொடர்பாக ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயபாஸ்கரன். இவரது கட்டுப்பாட்டில் திருத்தணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தின் மூலம், திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்காவில் உள்ளவர்களுக்கு, புதிய ஓட்டுநர் உரிமம் வழங்குதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் பொதுப்பணிவில்லை மேற்குறிப்பு, கனரக வாகன மேற்குறிப்பு, புதிய வாகனம் பதிவு செய்தல், வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்குதல் மற்றும் விபத்து வாகனங்கள் ஆய்வு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கணினி ஆப்ரேட்டராக தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான திருத்தணியை சேர்ந்த ராஜா (என்கிற) ராபர்ட் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மோட்டார் வாகன ஆய்வாளரின் ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை தெரிந்துகொண்டு, வெளிமாவட்டத்தை சேர்ந்த, தகுதியற்றவர்களுக்கு, ஓட்டுநர் உரிமம் வழங்கி உள்ளார். போலியான முகவரியை வைத்து ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தும், போலி ஆவணங்களை தயாரித்தும் கொடுத்துள்ளார்.

    தனது நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம் தாளவேடு விஷ்ணு, மெய்யூர் சக்திவேல் ஆகியோரின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை வட்டார போக்குவரத்து அலுவலர் விசாரணைக்கு அழைத்தபோது தலைமறைவாகி விட்டார்.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் புகார் செய்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பனுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்பூக்கும் ஆனந்தன் தலைமையில் போலீசார் தலைமறைவாக இருந்த ராஜா, விஷ்ணு, சக்திவேல் ஆகிய மூவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×