search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் சோதனை நடத்திவிட்டு போலீசார் திரும்பிய காட்சி.
    X
    சிறையில் சோதனை நடத்திவிட்டு போலீசார் திரும்பிய காட்சி.

    மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை

    மதுரை மத்திய சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிக்கியுள்ளது போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் கஞ்சா, செல்போன் உள்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் அதிகம் புழங்குவதாக ரகசிய தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து திலகர் திடல் போலீஸ் உதவி கமி‌ஷனர் வேணுகோபால் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை 6 மணியளவில் மதுரை மத்திய சிறைக்கு வந்தனர்.

    இதையடுத்து சிறைக் கதவுகள் மூடப்பட்டன. கைதிகள் அனைவரும் அறைக்குள் அடைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் கைதிகள் தங்குமிடம், கழிவறை, பணியிடம் உள்பட அனைத்து பகுதிகளிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். இதே போல பெண்கள் சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அங்கு பதுங்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலம், பீடி-சிகரெட், புகையிலை பொருட்கள், பிளேடு துண்டுகள், சிறு ஆணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை மத்திய சிறையில் போலீசாரின் பலத்த பாதுகாப்பு மற்றும் கெடுபிடி பரிசோதனைகளையும் மீறி தடை செய்யப்பட்ட பொருட்கள் சிக்கியுள்ளது போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    மத்திய சிறைக்குள் போலீசாரின் அதிரடி சோதனை 2 மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    Next Story
    ×