search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.மணி
    X
    ஜி.கே.மணி

    உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாமக கூட்டணி தொடரும்: ஜி.கே. மணி

    வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
    களக்காடு:

    நாங்குநேரி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி உறுதி. இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் தான் பதவி உள்ளது. எனவே ஆளும் கட்சி வெற்றி பெற்றால்தான் வளர்ச்சி திட்டங்கள் நமக்கு கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது. விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி செய்வோம் என்றார். இதை நம்பி தான் பொதுமக்கள் ஓட்டு அளித்தனர். ஆனால் எதையும் அவர் தள்ளுபடி செய்யவில்லை. எனவே தி.மு.க.வின் பொய் பிரசாரங்கள் பொதுமக்களிடம் எடுபடாது.

    செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை அவதூறாக பேசி வருகிறார்கள். இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்துள்ளார். இதுபோல 5 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பா.ம.க.வின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். இதற்காக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×