search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட முருகன்-மனைவி தேவி- கள்ளக்காதலன் வினோத்
    X
    கொலையுண்ட முருகன்-மனைவி தேவி- கள்ளக்காதலன் வினோத்

    கும்மிடிப்பூண்டியில் கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி

    கும்மிடிப்பூண்டியில் கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள செங்கல் சூளைமேடு பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (வயது 38). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கடந்த 12-ந்தேதி இரவு வீட்டுக்குள் முருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்போது அவரது மனைவி தேவி வீட்டில் இல்லை.

    இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத் தினர்.

    ஆரம்பத்தில் விசாரணையின் போது கணவர் கொலை குறித்து எதுவும் தெரியாது என்று கூறி வந்த தேவி பின்னர் அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் லாரி டிரைவர் வினோத்தை ஏவி தீர்த்து கட்டியதை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து தேவியை போலீசார் கைது செய்தனர். கணவரை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து தேவி அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-

    எனக்கும், வினோத்துக்கும், கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் இல்லாத நேரத்தில் அவரை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருப்பேன். இதுபற்றி கணவர் முருகனுக்கு தெரிந்ததும் என்னை கண்டிக்க தொடங்கினார். ஆனால் வினோத்துடன் உள்ள தொடர்பை விட முடியவில்லை.

    இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் முருகனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். இதுபற்றி கள்ளக்காதலன் வினோத்திடம் கூறியபோது அவரும் ஒப்புக்கொண்டார்.

    கடந்த 12-ந்தேதி இரவு கணவர் முருகன் மதுபோதையில் வந்து வீட்டில் தூங்கினார். எனவே இதுதான் அவரை கொலை செய்ய சரியான தருணம் என்று முடிவு செய்தேன்.

    முருகன் மதுபோதையில் தூங்குவது பற்றி கள்ளக்காதலன் வினோத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டேன்.

    வீட்டுக்கு வந்த வினோத், போதையில் தூங்கிய கணவர் முருகனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதற்கிடையே கொலையாளி வினோத் கொலை நடந்த மறுநாளே வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரது உடல் நிலை சரியானதும் கைது செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    முருகன் கொலை செய்யப்பட்ட போது தேவி மகனை மட்டும் கோவிலுக்கு செல்வதாக வெளியே அழைத்து சென்றுவிட்டார். அவரது மகள் வர மறுத்ததால் வீட்டிலேயே இருந்தார்.

    கொலையாளி வினோத் வந்தபோது முருகனின் மகள் இதனை கவனித்து இருக்கிறார். போலீசார் விசாரணையின் போது வினோத்தை அவர் அடையாளம் காட்டி இருக்கிறார்.

    தேவியும், வினோத்தும் ஏற்கனவே கடந்த 8 மாதத்துக்கு முன்பு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.

    அப்போது அவர்களை போலீசார் மீட்டு அறிவுரை கூறி தேவியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    இதன் பின்னரும் தேவி, கள்ளக்காதலன் வினோத்துடனான தொடர்பை கைவிடவில்லை. தற்போது இது கணவரை கொலை செய்யும் அளவுக்கு சென்று விட்டது.

    கணவரை மனைவியே கள்ளக்காதலனை ஏவி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×