search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு 137 பேர் அனுமதி

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உள்பட 30 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 107 பேர் என மொத்தம் 137 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

    இங்கு காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் அவர்களது ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் கணக்கிடப்படுகிறது. ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு என தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது. இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உள்பட 30 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 107 பேர் என மொத்தம் 137 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் தினசரி வெளிநோயாளியாக காய்ச்சல் பாதிப்புடன் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    Next Story
    ×