search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகரம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனி சார்பில் கொட்டபட்ட ரசாயன கழிவு பொருட்களை படத்தில் காணலாம்
    X
    அகரம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனி சார்பில் கொட்டபட்ட ரசாயன கழிவு பொருட்களை படத்தில் காணலாம்

    சூளகிரி அருகே ரசாயன கழிவுகளை ஏரி-குளத்தில் கொட்டியதால் தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை

    சூளகிரி அருகே ரசாயன கழிவுகளை ஏரி-குளத்தில் கொட்டிய தனியார் கெமிக்கல் நிறுவனத்தையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள உத்தன பள்ளி அகரம் கிராமத்தில் தனியார் கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளை லாரியில் ஏற்றி அந்த பகுதி ஏரி-குளத்தில் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் அகரம், பீர்ஜேபள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளன.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை ஏரியில் கொட்டவந்த லாரியையும், தனியார் கெமிக்கல் நிறுவனத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த உத்தனபள்ளி போலீஸ் மற்றும் தாசில்தார், ஆர்.ஐ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×