search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் உள்பட 36 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உட்பட 36 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கோவை:

    கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருகின்றனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காய்ச்சலுடன் வருபவர்களை பரிசோதனை செய்து ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது. அதில் தட்டணுக்கள் குறைபாடு உள்ளவர்களை டெங்கு காய்ச்சல் அறிகுறியின் பேரில் டெங்கு காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரம் செயல்பட கூடிய தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு கொசு வலைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் வரும் நோயாளிகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உட்பட 36 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலுக்கு 128 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×