search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா
    X
    டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா

    டி.எஸ்.பி.விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

    டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார்.
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி முகாம் அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. ஆனால் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது.

    சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்ணுப்பிரியா தந்தை ரவி வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம், சி.பி.ஐ. அறிக்கையில் உள்ள சிலவற்றை சுட்டிக்காட்டி, சி.பி.ஐ. தனது விசாரணையை தொடரவும், அறிக்கையில் எழுந்துள்ள சந்தேகங்களில் 14 புள்ளிகளை சுட்டிக்காட்டி அதற்கு பதில் அளிக்க வேண்டும். மேலும் 6 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், விசாரணை முடிந்து 2-வது அறிக்கையை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி தாக்கல் செய்தது. அதில், டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுலும் இல்லை என முதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அதே தகவலை 2-வது அறிக்கையிலும் குறிப்பிட்டு அறிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி சி.பி.ஐ. தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் சி.பி.ஐ.யின் 2-வது அறிக்கைக்கு பதில் அளிக்க ஆஜராகும்படி, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் டி.எஸ்.பி.விஷ்ணுப்பிரியா தந்தைக்கு சம்மன் அனுப்பியது.

    இன்றைய விசாரணையின்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜராகாததால் வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
    Next Story
    ×