search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள்
    X
    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள்

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுடன் 8 பேர் அனுமதி

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுடன் குழந்தைகள் உள்பட 8 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதேபோல் 12 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர், திருத்தணி சேர்ந்த அருள்தாஸ் (6), பாலோடு சேர்ந்த புனித் குமார்(7), தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த அபினாஷ், போரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன், ஆந்திர மாநிலம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த சம்பத், ஈக்காடு கண்டியைச் சேர்ந்த முனியம்மாள் ஆகியோரை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதேபோல் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர் ஆஸ்பத்திரி யில் 105 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    Next Story
    ×