search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடமாடும் மருத்துவ குழுவை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X
    நடமாடும் மருத்துவ குழுவை கலெக்டர் தொடங்கி வைத்தார்

    திருவள்ளூரில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 45 நடமாடும் மருத்துவ குழு

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 45 நடமாடும் மருத்துவ குழுவை இன்று கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று 45 நடமாடும் மருத்துவ குழுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    45 நடமாடும் மருத்துவக் குழுவில் ஒரு வாகனத்தில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் ஒரு உதவியாளர் மற்றும் ஓட்டுநர் இருப்பார்கள். இவர்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    எல்லா காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. நோய்தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காய்ச்சல் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 044 27664177 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் மர்ம காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல் நேரடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடைய வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

    நிகழ்ச்சியில் துணை இயக்குனர் பிரபாகரன், வட்டாட்சியர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×