search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    25 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ரஜினிகாந்த்; தஞ்சாவூர் வட்ட காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த காசியய்யா;

    வேலூர் மாவட்டம், மேல்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சீனிவாசன்; திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சந்திரசேகர்; பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த துரைராஜ்;

    விருதுநகர் மாவட்டம், மாவட்டக் குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த திருப்பதி; மல்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த பழனி செல்வ பாரதி; சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த கணேசமூர்த்தி;

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த குமார், மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த வந்த திருமதி பிச்சையம்மாள்;

    வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த சுவாமிநாதன், வாய்மேடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த கண்ணையன், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ராஜமாரி.

    சேலம் மாவட்டம், பொருளாதாரக் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த கணேசன், ஓமலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சரவணன்.

    சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஜானகிராமன்;

    திருச்சியில் மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த அசோக்குமார், கொள்ளிடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ராஜா, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த கோதண்டபாணி.

    கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த மணிகண்டன் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த கணேசன், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த வேணுகோபால்;

    சென்னை பெருநகரக் காவல், புனித தோமையர் மலை, இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்த சுபாஷ்;தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஜேக்கப், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சுரேஷ்குமார் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    Next Story
    ×