search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ்காரர்கள் மற்றும் கண்டக்டருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்ற காட்சி.
    X
    போலீஸ்காரர்கள் மற்றும் கண்டக்டருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்ற காட்சி.

    ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய விவகாரம்- போலீஸ்காரர்கள் ஆஜராக உத்தரவு

    நெல்லை அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ்காரர்கள் மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருபவர்கள் மகேஷ்(வயது 25), தமிழரசன்(25). இவர்கள் கூடங்குளத்துக்கு பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ்சில் சென்றனர். அப்போது கண்டக்டர் ரமேஷ், அவர்களிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறி உள்ளார்.

    அதற்கு அவர்கள், தங்களிடம் வாரண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாரண்டு படிவத்தை நிரப்பி கொடுக்காததால் அவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்டக்டரை, போலீஸ்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    இதுகுறித்து பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன் தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ்காரர்கள் இருவரும் 29-ந் தேதி தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் நடைபெறும் விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×