search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்

    அ.தி.மு.க. பிரமுகர் வணக்கம் சோமு நீக்கம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். நடவடிக்கை

    அ.தி.மு.க. பிரமுகர் வணக்கம் சோமுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வணக்கம் சோமு என்ற சோமசுந்தரம் (மலைக்கோட்டை அ.தி.மு.க. பொருளாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளனர்.

    Next Story
    ×