search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிவு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த 7-ந்தேதி மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது. மேட்டூர் அணைக்கு நேற்று 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரியில் 12 ஆயிரம் கன அடி த ண்ணீரும் கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. நீர்மட்டம் 120.20 அடியாக இருந்தது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 72 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 120.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 119.84 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறையும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×