search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டலேறு அணையில் இருந்து பாய்ந்து வரும் கிருஷ்ணா தண்ணீர்
    X
    கண்டலேறு அணையில் இருந்து பாய்ந்து வரும் கிருஷ்ணா தண்ணீர்

    கிருஷ்ணா தண்ணீர் திறப்பு 1500 கனஅடியாக அதிகரிப்பு

    கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பு இன்று 1500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பூண்டி ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. கண்டலேறு அணையின் 2 மதகுகள் வழியாக நீர் பாய்ந்து வருகிறது.

    முதலில் 1000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இன்று இது 1500 கனஅடியாக உயர்த்தப்படுகிறது. வரும் நாட்களில் பூண்டி ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    இந்த நீர் 152 கிலோ மீட்டர் தூரம் தாண்டி இன்னும் 5 நாட்களில் தமிழக எல்லையான  ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்து சேரும்.

    ஆந்திர மாநிலம் சோமசீலா அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு நீர் 1 டி.எம்.சி. வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு இந்த முறை கூடுதலாக கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக தெலுங்கு - கங்கைத் திட்ட முதன்மை பொறியாளர் முரளி நாகிரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சோமசீலா அணையில் தற்போது 65 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து கண்டலேறு அணைக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையில் 13 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சென்னை குடிநீர் தேவைக்காக, 1.5 டி.எம்.சி. தண்ணீர் படிப்படியாக திறந்துவிடப்படும்.

    கண்டலேறு அணையின் நிர்வரத்தின் அடிப்படையில், இனிவரும் காலங்களில் சென்னைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×