search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.28,776 க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 1½ மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 136 ஆகவும், ஒரு கிராம் ரூ.3,642-க்கும் விற்பனையானது.

    இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.3,597 ஆக சரிந்தது. இதனால் பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.28,776 க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50,300 ஆகவும், ஒரு கிராம் ரூ.50.30 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×