search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,096-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் படிப்படியாக உயர்ந்து வந்தது.

    கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் பவுனுக்கு ரூ. 30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.

    அதன்பிறகு தங்கத்தின் விலை சிறிது சிறிதாக குறைந்தது. 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ. 1,500 வரை குறைந்ததால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    எனினும் தங்கத்தின் விலை ஏற்ற-இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ. 3,614-க்கும், பவுன் ரூ. 28,912-க்கும் விற்பனை ஆனது.

    இன்று தங்கம் கிராமுக்கு ரூ. 23 அதிகரித்து ரூ. 3637-க்கு விற்பனையானது. இதனால் ஒரு பவுனுக்கு ரூ. 184 அதிகரித்து இன்று ரூ. 29,096-க்கு விற்பனை ஆகிறது.

    அதேநேரம் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து இன்று ஒரு கிராம் ரூ. 51.80-க்கும், ஒரு கிலோ ரூ. 51 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆகிறது.
    Next Story
    ×