search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய காட்சி.
    X
    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய காட்சி.

    அணை பகுதியில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளம்-குளிக்க தடை

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் நேற்றும் பலத்த மழை பெய்தது. இரவும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 66.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. அவ்வப்போது மழை பெய்தது. சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் இன்று விட்டுவிட்டு மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையினால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 24.50 அடியாக இருந்தது. அணைக்கு 391 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 122 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 64.95 அடியாக இருந்தது. அணைக்கு 786 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-36.4, பெருஞ்சாணி-66.6, சிற் றாறு-1-17, சிற்றாறு-2-56, மாம்பழத்துறையாறு-10, நாகர்கோவில்-2.2, பூதப்பாண்டி-5.2, சுருளோடு- 44.2, கன்னிமார்- 11.4, ஆரல்வாய்மொழி-2.4, கோழிப்போர்விளை-15, முள்ளங்கினாவிளை-4, திற்பரப்பு-19, பாலமோர்-41.4, ஆணைக்கிடங்கு-10.2, குளச்சல்-2.8, குருந்தன்கோடு-8.2, ஆணைக்கிடங்கு-3.


    Next Story
    ×