search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட சந்திரசேகர்
    X
    கொலை செய்யப்பட்ட சந்திரசேகர்

    புதுவையில் நாட்டு வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை

    புதுவையில் இன்று நாட்டு வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு பங்களா தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 52). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுத்து பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.

    காலாப்பட்டை சேர்ந்த வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் முதல் குற்றவாளியாக சந்திரசேகர் சேர்க்கப்பட்டிருந்தார்.

    அவர் உள்ளிட்ட பல குற்றவாளிகள் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு சந்திரசேகர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    ஜோசப் கொலையில் மற்றொரு குற்றவாளியான பார்த்திபனின் மனைவி சித்ரா நேற்று இறந்துவிட்டார்.

    அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவற்காக சந்திரசேகர் தனது மனைவியுடன் இன்று காலை கனகசெட்டி குளத்திற்கு சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர்.

    அவர்கள் திடீரென சந்திரசேகர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள். அதில் குண்டுவெடித்து சந்திரசேகர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். உடனே அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி அவரை சரமாரியாக வெட்டியது. இதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி கண்முன்னேயே இந்த சம்பவம் நடந்தது.

    ஜோசப் கொலைக்கு பழிவாங்க அவரது ஆதரவாளர்கள் இந்த கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.

    போலீசார் விசாரணை

    இதுசம்பந்தமாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையில் யார்-யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது இனிமேல் தான் தெரியவரும்.

    கொலை செய்யப்பட்ட சந்திரசேகரும் காங்கிரஸ் பிரமுகராக இருந்து வந்தார். ஜோசப் கொலைக்கு பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×