search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசிய காட்சி.
    X
    அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசிய காட்சி.

    உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்- அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது என்று அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் அண்ணாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாலக்கோடு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். நகர செயலாளர் சங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் அண்ணாவி, தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

    தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியானது மக்களுக்கான ஆட்சியாக உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு திட்டமானாலும் அது அதிமுக அரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும். வேறு யாராலும் முடியாது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது.
     
    தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் தொடர இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. உறுப்பினர்களை தேர்வு செய்யுங்கள். வருகிற 2021ம் ஆண்டு வரை ஆட்சி தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத் குமார், கோவிந்தசாமி மாவட்ட   அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், கூட்டுறவு சங்க செயலாளர்கள் பாலகிருஷ்னன், வீரமணி, சுப்ரமணி, சரவணன்,கிரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜிணா செந்தில், முனி மாதன், மனிவன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர செயலார் ராஜா நன்றி கூறினார்.

    தருமபுரி மாவட்டம் அரூரில் அண்ணா 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். இதில் எம்.எல்.ஏக்கள் சம்பத்குமார்,  கோவிந்தசாமி மற்றும் ஜி.கே.இன்பராஜ், பாப்பிரெட்ப்பட்டி பொறுப்பாளர் விஸ்வநாதன், மொரப்பூர் பொறுப்பாளர் மதிவாணன், மாவட்ட வழக்கறிஞர் துணை தலைவர் பசுபதி,தஞ்சை எம்.கே.சங்கர் ,மாவட்ட கழக துணை செயலாளர் செண்பகம் சந்தோஷ், மாவட்ட பிரதிநிதி சாமிக்கண்னு, பாஷா, சிவன், மாநில சுகர் மில்பிரிவு பொருளாளர் சின்னதுரை, வேலு,  பாபு, மற்றும் கூட்டுறவு தலைவர்கள் , இயக்குனர்கள் உள்பட அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×