search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்.
    X
    கோர்ட்டு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்.

    கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    புதிய வாகன சட்டத்தை ரத்து செய்ய கோரி கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    கோவை:

    மோட்டார் வாகன இழப்பீட்டு சட்டம் குறித்த திருத்தம் மற்றும் உத்தரவினை திரும்ப பெறும் வரையில் வக்கீல்கள் தொடர்ந்து சமரச மையம், மக்கள் நீதி மன்றம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை மையம் ஆகியவற்றை புறக்கணிப்பது.

    மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019-ல் வழக்காடிகளுக்கு பாதகமில்லாமல் புதிய நடைமுறை விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

    வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கோவை கோர்ட்டு முன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுக்கரை, சூலூர், வால்பாறை உள்ளிட்ட இடங்களில் 3 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வழக்குகள் தேக்கம் அடைந்தது.
    Next Story
    ×