search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு நேற்று 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 13 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    சேலம்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.

    நேற்று 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 13 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 12 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியிலேயே நீடிக்கிறது.

    Next Story
    ×